ஒர் ஊரில், ஏழை இளைஞன் ஒருவன் இருந்தான். விவசாயம் செய்து தன் பிழைப்பை ஓட்டிய அவனுக்குப் பணக்கரனாக வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. கூடவே பெரிய அளவிலான நிலத்திற்கு சொந்தக்காரனாக வேண்டுமென்ற ஆசையும் அவனுக்கு ஏற்பட்டது.
பாடுபட்டு சிறுகச் சிறுக பணத்தைச் சேமித்து, பல ஏக்கர் நிலம் வாங்க வேண்டுமென என்ணினான். ஒரு நாள் அவன், பக்கத்தில் உள்ள சிற்றூருக்கு சென்று கொண்டிருந்தான். பெரிய அளவிலான நிலம் பராமரிக்கப்படாமல் கிடந்ததைப் பார்த்தான்.
அந்த நிலம் விவசாயத்திற்கு சிறந்ததெனக் கருதியதால் அந்த நிலம் குறித்து விசாரித்தான். நில உரிமையாளரைத் தேடிச் சென்றான்.
நில உரிமையாளரிடம், அந்த நிலத்தைத் தனக்கு விலைக்குத் தரும்படி கோரினான்.
நில உரிமையாளர் அவனிடம், “நீ ஓடிவிட்டுத் திரும்பும் வரை எவ்வளவு துரம் உன் கால் படுகிறதோ அவ்வளவு தூரத்திற்கான நிலத்தை இலவசமாகவே நீ எடுத்துக் கொள்”, எனக் கூறினார்.
இதைக் கேட்ட அந்த இளைஞன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். சிறிது காலத்தில் தான் கோடீஸ்வரனாகி விடலாம் என்ற எண்ணத்தில், கற்பனையில் மிதந்தான்.
மறுநாள் காலையில், அந்த இளைஞன் ஓடி எவ்வளவு நிலத்தை அடையப் போகிறான் என்பதைக் காண அந்த ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர்.
நில உரிமையாளர் குரல் கொடுத்தவுடன் இளைஞன் ஓடத் தொடங்கினான். தன்னால் முடிந்த அளவிற்கு வேகமாக ஓடினான். பசி மயக்கம் எதையும் பொருட்படுத்தாமல் ஓடிக் கொண்டே இருந்தான்.
உச்சி வெயில் சுல்லென்று அடிப்பதையும் பொருட்படுத்தாமல் ஓடினான். சூரியன் மறைவதற்குள் ஓடியவன் வந்துவிடுவான, இல்லையா என்ற சந்தேகமே எற்பட்டு விட்டது ஊர் மக்களுக்கு. மாலையில் திரும்பியவன் ஓட்டத்தை முடிக்க சிறிது தூரம் இருப்பதை உணர்ந்தான். இளைஞனைக் கண்ட ஊர் மக்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.
அவனது உடல் வழுவிழுந்திருந்தது. கால்கள் தள்ளாடியது. மூச்சு திணறியப்டி கீழே விழுந்தான் விழுந்த சிறிது நேரத்தில் அவன் உயிர் பிரிந்தது.
இவ்வளவு தூரம் ஓடி பல நிலங்களை சொந்தமாக்கிக் கொள்ள நினைத்தவனுக்கு, கடைசியில் கிடைத்தது அவனை புதைப்பதற்கான ஆறு அடி நிலம் மட்டுமே.