அப்பா அரசியல்வாதி, மகன் அப்பாவிடம் போய், "அப்பா உங்களை மாதிரியே நானும் அரசியலில் சேர வேண்டும், தலைவராக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன், எனக்கு அரசியல் பாடம் சொல்லித் தாருங்கள்" என்றான்.
அவரும் "சரி" என்று சொல்லிவிட்டு, ஒரு பெரிய ஏணியை எடுத்துக் கொண்டு வந்து சுவரில் சாத்தினார்.
"மகனே! இந்த ஏணியில் ஏறிப்போய் அந்தப் பரண் மேலே இருக்கும் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வா" என்றார்.
"ஏணி உயரமாக இருக்கிறதே! பயமாக இருக்கிறது” , என்றான் மகன்.
"பயப்படாதே.... நான் பிடித்துக் கொள்கிறேன்" என்றார் அப்பா.
மகன் ஏணியில் ஏறினான்.. உச்சிக்குப் போனதும் அப்பா பிடியை விட, ஏணி சரிந்து மகன் கீழே விழுந்தான்.
இடுப்பைப் பிடித்துக் கொண்டபடியே எழுந்து "என்னப்பா இப்படி கையை விட்டுட்டீங்களே" என்று கத்தினான்.
அப்பா நிதானமாகச் சொன்னார் " மகனே இதுதான் அரசியலில் முதல் பாடம்" என்றார்.
"இதில் என்ன பாடம் இருக்கிறது? என்று கேட்டான் மகன்.
அப்பா சொன்னார், "பெற்ற அப்பனாக இருந்தாலும் நம்பாதே, அதுதான் அரசியலின் முதல் பாடம்".