பாடகருக்கு சூடு வைத்தால்...?
ஒரு பாடகன் தனது வீட்டுத் திண்ணையில் இருந்தபடி தலையை அசைத்தக் கொண்டு சங்கீதம் பாடிய படி இருந்தான்.
அந்த தெருவில் சென்ற மக்கள் எல்லாம் அவனைச் சுற்றி நின்றபடி பாட்டை ரசித்துக் கேட்டுக் கொண்டு நின்றார்கள்.
அப்போது அந்த வழியாக ஒரு ஆடு மேய்க்கும் இடையன் ஒருவன் வந்தான்.
அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்து தானும் சற்று தாமதித்து நின்றபடி அவனின் பாட்டை கேட்டுக் கொண்டு இருந்தான்.
சிறிது நேரம் சென்றதும் ஓவென்று அழத் தொடங்கினான். அங்கு நின்றவர்கள் அனைவரும் இவன் பாட்டின் இரசனையின் மிகுதியால், மகிழ்ச்சியில் அழுகிறான் என நம்பி அவனுக்கு ஆறுதல் சொன்னார்கள்.
உடனே அவன் விழிப்படைந்து நான் அழுதது இவனுக்கு கண்டிருக்கும் நோயைப்பற்றித்தான். எனது மந்தையில் ஒரு ஆடு இப்படித்தான் தலையை ஆட்டியபடி கத்திக் கொண்டிருந்தது. அதற்கு எந்த மருந்து செய்தும் நோய் மாறாது சிறு நேரம் செல்ல இறந்து விட்டது. அதனால் இவரின் நோய்க்கு கையில் இரும்பு காய்ச்சிச் சுட்டால் தலை ஆட்டம் நின்றுவிடும் என்றான்.
கூடி நின்றவர்கள் அவனின் அறியாமையை நினைத்து வேதனைப்பட்டார்கள்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.