எது அற்பமானது தெரியுமா?
ஒரு புலவர் பெருமானைப் பார்த்து ஒரு செல்வந்தர், “உலகத்தில் அற்பமானது எது?” என்றார்.
அந்தப் புலவர் “துரும்பு” என்றார்.
அந்தத் துரும்பை விட அற்பமானது உள்ளதா?” என்று கேட்டார்.
“அதை விட அற்பமானது பஞ்சு” என்றார்.
“அந்தப் பஞ்சை விட அற்பமானது உள்ளதா? என்று கேட்டார்.
புலவர், “யாசிக்கிறவன் தான் ரொம்ப அற்பமானவன்” என்று சொன்னார்.
உடனே கேட்டவர், “பஞ்சைக் காற்று அடித்துக் கொண்டு போகிறதே... யாசிக்கிறவனை ஏன் காற்று அடித்துக் கொண்டு போகவில்லை?” என்று கேட்டார்.
“பஞ்சு காற்றில் பறந்து போகும் போது எதுவும் கேட்பதில்லை. ஆனால் யாசிக்கிறவனை ஏன் காற்று அடித்துப் போகவில்லை... ஏனென்றால் நம்மையும் ஏதாவது கேட்பானோ என்று அஞ்சி காற்று அவனிடம் போக மறுக்கிறது” என்றார்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.