அவளுக்கு என்ன குறையோ?
சிவாஜியின் குருவாக விளங்கியவர் சமர்த்த ராமதாச சுவாமிகள்.
ராமதாசர் ஒவ்வொரு நாளும் சில வீடுகளில் பிச்சை பெற்று வருவது வழக்கம்.
ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று சுலோகங்களைக் கூறுவார்.
ஒரு நாள் ஒரு வீட்டுக்குப் போனார். அந்த அம்மையார் சாணமிட்டு வீடு மெழுகிக் கொண்டிருந்தார்.
தம் வீட்டு வாசலில் சுவாமிகள் வந்து நின்றதும், என்ன காரணத்தாலோ சீற்றமடைந்து தம் கையிலிருந்த சாணிச் சுர்ணையை, மெழுகிக் கொண்டிருந்த துணியை அவர் மீது வீசி விட்டார்.
சுவாமிகள் பதிலேதும் பேசாமல் அதனைக் கையில் எடுத்துக் கொண்டார். ஆசிரமத்துக்கு வந்தார்.
அந்தத் துணியை நன்றாக அழுக்குப் போகக் கசக்கினார். காய வைத்தார்.
பிறகு அதிலிருந்த நூல்களையெல்லாம் தனித்தனியே எடுத்து விளக்குத் திரியாக ஆக்கி, சுவாமி சந்நிதிக்குச் சென்று அதைக் கொண்டு விளக்கு ஏற்றிவிட்டு, “ராமா! அந்த அம்மையாருக்குப் என்ன குறையோ கோபமோ தெரியவில்லை. அவளது வாட்டத்தைப் போக்க நீதான் அருள் புரிய வேண்டும்” என்று வேண்டினார்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.