உனக்கு எப்படி வீரம் வந்தது?
ஒரு நாள் காட்டு வழியாக வந்து கோண்டிருந்த அவனை சிங்கம் ஒன்று பின் தொடர்ந்து வந்தது.
அவன் எதிர்பார்க்காத சூழலில் திடீரென சிங்கம் அவன் மேல் பாய்ந்தது.
அவனும் சிங்கத்துடன் விடாமல் போராடினான்.
சிங்கத்துக்கு ஒரு மனிதன் நம்முடன் இப்படி சரியாகப் போராடுகின்றானே என்று ஆச்சர்யமாயிருந்தது.
அவன் சிங்கத்தின் பிடரி முடியைப் பிடித்து உலுக்கிக் கொண்டே, “என்னிடம் உன் வீர விளையாட்டெல்லாம் ஒன்று செல்லாது” என்றான்
சிங்கம் அவனிடம் கேட்டது, “அடேயப்பா! உனக்கு எப்படி இவ்வளவு வீரம் வந்தது?”
அவன் சொன்னான், “நானும் உன்னைப் போல் ஆடு சாப்பிடுகிறவன்தானே!”.
- கண்ணதாசன் சொன்ன குட்டிக்கதை.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.