ஒரு ஊரில் ஒரு காகம் இருந்தது. ஒரு கொக்கை பார்க்கும் வரை, அது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
அது கொக்கைப் பார்த்து, “நீ வெள்ளையாக எவ்வளவு அழகா இருக்கிறாய்... கருப்பா இருக்கும் என்னை எனக்கே பிடிக்கலை” என்றது.
கொக்கு, “நானும் அப்படித்தான் நினைத்தேன் , கிளியைப் பார்க்கும் வரை, அது இரண்டு நிறங்களில் எவ்வள்வு அழகா இருக்கு தெரியுமா?” என்றது.
காகமும் கிளியிடம் சென்று கேட்டது.
அதற்கு கிளி, “உண்மைதான் நான் ஒரு மயிலைப் பார்க்கும் வரை, மகிழ்ச்சியாத்தான் இருந்தேன். ஆனால் அது பல நிறங்களில் எவ்வளவு அழகாக இருக்குது தெரியுமா?” என்றது.
உடனே காகமும் மயில் இருக்கும் ஒரு மிருக காட்சி சாலை ஒன்றுக்குச் சென்றுமயிலிடம் , “அழகு மயிலே , உன்னைக் காண இவ்வளவு பேர்... என்னைப் பார்த்தாலே இவர்கள் முகத்தை திருப்பிகொள்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை உலகிலேயே நீதான் அதிக மகிழ்ச்சியானவர்” என்றது.
மயில், “அன்பு காகமே , நான் எப்பவும் அழகு என்றும், மகிழ்ச்சியான பறவை என்று நினைத்து கொண்டிருந்தேன். இந்த அழகுதான் என்னை என்னை இந்தச் சிறையில் பூட்டி வைத்திருக்கிறது. இந்த மிருகக்காட்சி சாலை முழுதும் நான் பார்த்ததில் , காகம் மட்டுமே பூட்டி வைக்கப்படவில்லை. நானும் காகமாக இருந்தால், உலகம் முழுதும் ஜாலியாக சுற்றி வரலாமே” என்றது.
அதைக் கேட்ட காகம், அழகு சிறைப்படுத்திவிடும் அல்லது ஆபத்தைத்தான் தரும் என்பதை உணர்ந்து அங்கிருந்து தெளிவுடன் கிளம்பியது.