முட்டாள்கள் இருவர், தெய்வத்தைக் காண வேண்டுமென்று ஏதோ ஒரு கோவிலுக்குப் போனார்கள்.
அங்கே தெய்வப் பதுமையைப் பார்த்து, ஒருவன் மற்றவனிடம், 'தம்பி, வெறும் கல் அல்லவா இது? இதையா எல்லாரும் தெய்வம் என்கிறார்கள்?'' என்றான்.
இது கோவிற் பணியாளர்களின் காதில் விழுந்தது.
தெய்வத்தைக் கல் என்று இகழ்ந்ததற்காக அவனை நையப் புடைத்து வெளியே துரத்தினார்கள்.
சில நாள் கழித்து அவர்கள் இருவரும் ஒரு நண்பனின் வீட்டில் விருந்துண்ணச் சென்றனர்.
சோற்றில் சிறு கல்லைக் கண்ட இரண்டாமவன் முதல்வனிடம், "என்ன சோறப்பா இது! ஒரே கல்லாக இருக்கிறதே!'' என்றான்.
முன்னே அடிபட்ட முதல்வன் தன் துணைவனைப் பளாரென்று அறைந்து, "டே முட்டாள்! கல் என்று சொல்லி ஆண்டவனைப் பழிக்கிறாயேடா பாவி! இப்படிச் சொல்லி முன்பு நான் அடிபட்டதை மறந்து போனாயா? சோற்றில் குட்டியாண்டவன் இருக்கிறான் என்று சொல்லுடா!'' என்றான்.