மதிய வேளை.
மரப்பொந்து ஒன்றில் ஆந்தை ஒன்று தூங்கிக் கொண்டிருந்தது.
கீழே புல்தரையில் வெட்டுக்கிளி பாட்டுப்பாடிச் செய்து கொண்டிருந்த ஆர்ப்பாட்டம் ஆந்தையின் தூக்கத்திற்கு இடையூறாக இருந்தது.
அந்தப் பாட்டு சகிக்க முடியாத நிலையில், வெட்டுக்கிளியிடம் அது பாடுவதை நிறுத்தும்படி ஆந்தை கேட்டது.
ஆனால் வெட்டுக்கிளி கேட்கவில்லை.அது ஆந்தையிடம் கோபமாக, “நீ குருட்டுக் கழுதை! பகலில் வெளியே தலை காட்டுவதில்லை. எல்லாரும் இரவில் தூங்கிய பின்புதான் நீ வெளியே வருவாய். இரவில் உன்னைப் போன்ற திருடர்கள்தான் வெளியில் திரிவார்கள்.” என்று திட்டியது.
ஆந்தை சிறிது நேரம் யோசனை செய்தது. நம் தந்திரத்தால்தான் இந்த வெட்டுக்கிளியை அடக்க வேண்டும் என்று தீர்மானித்தது.
சில நிமிடங்கள் யோசனைக்குப் பிறகு, "நண்பனே, என்னைத் தூங்கவிடாமல் நீ செய்ய விரும்பினால் செய்துவிட்டுப் போ.ஆனால் விழித்துக் கொண்டிருப்பதற்கு இனிமையாய் இருப்பதற்காகவாவது உன் சங்கீதம் உபயோகப்படட்டுமே...உன் சாரீரம் இனிமையானது.அதைத் தேவகானம் மாதிரி செய்வதற்கு என்னிடம் ஓர் அமிர்தம் இருக்கிறது. அதில் இரண்டு துளி சாப்பிட்டால் போதும். உன் குரலும் அமிர்தமாய் விடும். மேலே வா,தருகிறேன்"என்றது.
ஆந்தையின் இனிமையான பேச்சைக் கேட்டு ஏமாந்த வெட்டுக்கிளி மரத்தில் ஏறி ஆந்தையிடம் போனது.
வெட்டுக்கிளி பக்கத்தில் வ்ந்ததும ஆந்தை, அப்படியே பிடித்து நசுக்கிக் கொன்றது.
பிறருக்கு நம்முடைய தொல்லையில்லாத வரை நமக்கும் தொல்லை இல்லை.