அரசன் ஒருவன் தன் அமைச்சரோடு ஊரைச் சுற்றிப் பார்க்கப் போனான்.
வழியில் கரும்புத் தோட்டம் வந்தது.
இருவரும் அத்தோட்டத்திலிருந்த கரும்பைத் தின்றார்கள்.
அரசன் அமைச்சரிடம், ''என்ன அமைச்சரே! இந்தக் கரும்பு கசக்கிறதே'' என்றான்.
அதற்கு அமைச்சர், ''இந்தக் கரும்பும் அப்படித்தான் இருக்கிறது. ஒரே கசப்பு'' என்றார்.
இன்னொரு கரும்பைச் சாப்பிட்ட அரசன், ''இந்தக் கரும்பு நன்கு இனிக்கிறதே'' என்றான்.
''ஆம். எவ்வளவு இனிப்பு. நான் தின்னும் கரும்பும் மிகமிக இனிப்பாக இருக்கிறதே'' என்றார் அமைச்சர்.
உடனே அரசன் அமைச்சரிடம், ''என்ன அமைச்சரே! நான் சொல்வது போலவே நீங்கள் சொல்கிறீர்களே!'' எனக் கேட்டான்.
அதற்கு அமைச்சர், ''நான் உங்கள் அமைச்சர் அல்லவா? உங்கள் கருத்து எப்படிப் போகிறதோ அதே மாதிரிப் போக வேண்டியதுதானே என் வேலை'' என்றார்.