இரண்டு குடிகாரர்கள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் பயணம் செய்த போது படகு ஆற்றில் மூழ்கியது.
குடிகாரர்கள் இருவரும் இயன்றவரை நீந்தினார்கள். ஆனால் பாவம், அவர்களால் நீண்ட நேரத்திற்குத் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
அவர்கள் இருவரும் ஓய்ந்து போனார்கள்.
மரண பயத்தால் ஒரு குடிகாரன், ''கடவுளே, எங்களைக் காப்பாற்று நாங்கள் உயிர் தப்பினால் குடிப்பதையே விட்டுவிடுகிறோம்" என அலறினான்.
அதற்குள் மற்றொரு குடிகாரன், ''அவசரப்பட்டுக் கண்டபடி உளறாதே. அதோ பார், ஒரு படகு நம் பக்கம் வருகிறது. ஏடாகூடமாக நீ கடவுளிடம் வேண்டிக் கொண்டு, 'தண்ணி' இல்லாமல் என்னைத் தவிக்க வைத்து விடாதே!" என்றான்.