ஓர் அநாதை ஆசிரமத்திற்கு நிதி கேட்டு ஒரு பணக்காரரிடம் ஆசிரமத் தலைவர் சென்றார்.
பணக்காரரிடம் அவர், ‘‘சார்! உங்களுக்கு மாத வருமானமே அதிகமாக வரும். ஆசிரமத்திற்கு ஏதாவது உதவி செய்யுங்கள்?’’ என்றார்.
அதற்கு அந்தப் பணக்காரன், ‘‘என் வயதான தாயார் வைத்தியச் செலவிற்காக மாதம் எவ்வளவு செலவாகிறது என்று உமக்குத் தெரியுமா?’’ என்று கேட்டார்.
‘‘அப்படியா! மிகவும் வருந்துகிறேன். எனக்கு அதைப் பற்றித் தெரியாது ஐயா!’’
‘‘சரி! எனது சகோதரன் போரில் கால்களை இழந்து சக்கர நாற்காலியோடு இருக்கிறான். அதுவாவது உங்களுக்குத் தெரியுமா?’’
‘‘சாரி சார். மன்னிக்கணும்’’
‘‘அது போகட்டும். எனது தங்கையின் கணவர் ஒரு விபத்தில் உயிரிழந்துவிட்டார். தங்கை மூன்று குழந்தைகளுடன் மிகவும் கஷ்டப்பட்டுக் குடித்தனம் நடத்துகிறாள் அதுவாவது தெரியுமா?’’
நிதி கேட்டு வந்தவருக்கு மிகுந்த சங்கடமாகப் போய்விட்டது. தலைகுனிந்தபடி, ‘‘எனக்கு இவையெல்லாம் தெரியாது சார்’’ என்றார்.
அப்போது அந்தப் பெரிய மனிதர், ‘‘இவர்களுக்கே நான் ஓர் உதவியும் செய்யவில்லை; உங்கள் ஆசிரமத்திற்கு உதவி கேட்டு வந்துவீட்டீர்களே!’’ என்றார்.
நிதி கேட்டு வந்தவர் மயக்கமடைந்தார்.