நபிகள் நாயகம் ஒரு சந்தைப் பக்கமாகப் போயிருந்தார்.
ஒரு மனிதன் தானியத்தைக் குவித்து வைத்திருந்தான்.
நபிகள் நாயகம் தானியக் குவியலுக்குள் கைகளை விட்டுத் துழாவிப் பார்த்த போது, தம் கைவிரல்கள் ஈரமாக இருப்பதைக் கண்டார்.
உடனே நபிகள் நாயகம், "தானியக்காரனே! என்ன இது?'' என்று கேட்டார்.
"தீர்க்கதரிசி அவர்களே! தானியத்தில் மழை பெய்து விட்டது” என்றான் தானிய வியாபாரி.
"அப்படியானால் நீ ஏன் நனைந்த தானியத்தை மேலாகக் குவித்து வைக்கவில்லை? அப்படிச் செய்தால் எல்லோருக்கும் உண்மை தெரியும் அல்லவா? நம்மை ஏமாற்றுகிறவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களாக மாட்டார்கள்'' என்றார் நபிகள் நாயகம்.