ஒரு நாள் நபிகள் நாயகம் மாலை நேரத்தில் தமது தோழர்களோடு அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது உடல் வலிமை வாய்ந்த சாதாரண மனிதன் ஒருவன் அங்கே வந்து, நபியவர்களை வணங்கி நின்றான்.
அவர், அவனது கரங்களைப் பற்றித் தமது கண்களில் வைத்து ஒற்றிக் கொண்டார்.
சிறிது நேரத்தில் அந்த மனிதன் நபியவர்களை வணங்கி விடைபெற்றுச் சென்றான்.
அங்கிருந்த தோழர்கள் நபியவர்களைப் பார்த்து, "அவன் ஒரு சாதாரண மனிதனாயிற்றே! அவனது கைகளையெடுத்துத் தாங்கள் ஏன் உங்கள் கண்களில் வைத்து ஒற்றிக்கொண்டீர்கள்?'' என்று வினவினார்கள்.
அதற்கு நபியவர்கள், ''ஆம், அவன் ஒரு சாதாரண மனிதன் தான். ஆனால் அயர்வின்றி உழைத்து உழைத்து அவனுடைய கைகள் காய்ப்பேறியுள்ளன; உழைப்பின் சின்னங்களான அந்தக் கைகளுக்கு நான் மிகவும் மதிப்புக் கொடுக்கிறேன்'' என்று பதிலளித்தார்.