“சுவாமி! ஞானத்தைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று சீடன் கேட்டதற்கு குரு கூறினார்:
"சூரியனை உதிக்கவோ, மறையவோ செய்வதற்கு நீ என்னென்ன செய்ய முடியுமோ அவையனைத்தையும் செய்"
சீடனுக்குத் திகைப்பு!
'இவர் என்ன சொல்கிறார்? சூரியன் உதிப்பதும், மறைவதும் இயற்கை நிகழ்ச்சி. இதில் நான் என்ன செய்ய முடியும்? அப்படியானால் ஞானத்தை அடைவதில் என் பங்கு ஒன்றுமில்லையா?' என்றே யோசித்து, "நீங்கள் சொல்வதிலிருந்து இதில் நான் செய்யக்கூடியது ஒன்றுமே இல்லை என்றாகிறது. அப்படியானால் சாஸ்திரங்கள், சடங்குகள், ஆன்மீக நூல்கள் இவையெல்லாம் எதற்கு?" எனக் கேட்டான்.
*ஞானம் என்னவோ தன்னிச்சையாக வந்து சேரலாம்; ஆனால் அப்படி நேரும் போது நீ விழித்திருக்க வேண்டுமே? அப்படி விழித்திருந்து, ஞானத்தைப் பெறுவதற்குத் தயார் நிலையில் உன்னை வைத்திருக்கவே சாஸ்திரங்கள், சடங்குகள், அறநெறி நூல்கள் இவையெல்லாம் உள்ளன" என்று விளக்கினார் குரு.