ஒரு சமயம் நபிகள் நாயகம் தீவிரமான சிந்தனையோடு எதையோ எழுதிக் கொண்டிருந்தார்.
அவரது உடை தரையில் படர்ந்து இருந்தது.
ஒரு பூனை அந்த உடையின் மீது படுத்து அப்படியே தூங்கிவிட்டது.
தொழுகைக்கான நேரம் வந்ததால், எழுதுவதை நிறுத்திவிட்டு நபிகள் நாயகம் எழுந்திருக்க முயன்றார்.
தன் உடையின் மீது பூனை தூங்கிக் கொண்டிருப்பதைக் கவனித்தார்.
அவர் பூனையின் தூக்கத்தைக் கலைக்க விரும்பவில்லை.
தனது சகோதரியிடம் மெல்ல, ‘‘ஒரு கத்தரிக்கோல் கொண்டு வா’’ என்றார்.
கத்திரிக்கோலால் தமது உடையில் பூனை படுத்திருக்கும் பகுதியை மட்டும் சப்தமில்லாமல் கத்தரித்தார்.
பூனை எதுவுமறியாமல் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது.
நபிகள் நாயகம் அதன் பிறகே தொழுகைக்குச் சென்றார்.