‘ஒரு மன்னனுக்கு தன் மந்திரியிடம் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. அவனை ஒழித்துக் கட்ட விரும்பினான். ஆனால், மக்கள் சந்தேகப்பட்டு தன்னையே எதிர்ப்பார்கள் என் அறிந்து, மந்திரியிடம் ஒரு கடிதத்தை உறையில் போட்டுக் கொடுத்து, பக்கத்து நாட்டு அரசனிடம் தூது அனுப்பினான்.
அந்தக் கடிதத்தில், “இந்தக் கடிதம் கொண்டு வரும் மந்திரியின் தலையைக் கொய்து விடவும்” என்று எழுதப்பட்டிருந்தது.
அதைப் படித்துப் பார்த்த பக்கத்து நாட்டு மன்னன் மந்திரியிடம் விசயத்தைச் சொல்லி, “என் உன் மன்னர் இப்படி எழுதியிருக்கிறார்?” என்று கேட்டான்.
“அரசே! என் எதிர்காலத்தைக் கணித்த ஜோதிடர் ஒருவன். நான் எங்கு இறக்கிறேனோ அங்கு 12 வருடங்கள் மழை பெய்யாது என்று கூறியுள்ளான். அதை மன்னரிடம் தெரிவித்திருந்தேன். என்னைக் கொல்ல எண்ணிய மன்னன் தன் தேசத்தைக் காப்பாற்றவே இப்படி சூழ்ச்சி செய்து தங்களிடம் அனுப்பியுள்ளான்” என்றான் மந்திரி.
பக்கத்து நாட்டு மன்னன் தூது வந்த மந்திரியை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படி சொன்னான்.
மந்திரி மதுநுட்பத்தால் தப்பித்தான்.