காஞ்சீபுரத்திலிருந்து, கோவிலைச் சேர்ந்த சில மரியாதைப் பொருள்களைத் திருப்பதிக்கு எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது.
அந்த வேளையில் அவற்றை எடுத்துச் செல்வதற்கு உரிய தக்க பணியாள் எவரும் அங்கில்லை.
உடனே சற்றும் தயங்காமல் இராமானுஜரே அந்தக் கோவில் மரியாதைப் பொருட்களைத் திருப்பதிக்கு எடுத்துச் செல்லும் பணியை மேற்கொண்டார்.
நீண்டதும் துன்பம் தருவதுமாகிய பயணத்தை, புகழ் வாய்ந்த மகானாகிய ராமானுஜர் தாமே வலிய மேற்கொண்டு, கோவில் பொருள்களைத் திருமலை நம்பியிடம் கொண்டு சேர்த்தார்.
பிரசித்தி பெற்ற புண்ணிய புருஷரான இராமானுஜரின் செயல், திருமலை நம்பியை வியப்பில் ஆழ்த்தியது.
எனவே அவர், “இந்தப் பணியைத் தாங்கள் எதற்கு மேற்கொள்ள வேண்டும்?'' என்று இராமானுஜரை வினவினார்.
அதற்கு இராமானுஜர், "என்னைக்காட்டிலும் தாழ்ந்தவர் யாரேனும் இருப்பின் அவரிடம் இந்தப் பணியை ஒப்படைக்க நினைத்தேன். ஆராய்ந்து பார்த்தபோது என்னைவிடச் சிறியவர் எவரும் இல்லை என உணர்ந்ததனால் நானே இந்தப் பணியை மேற்கொண்டேன்'' என்று பதில் கூறினார்.