பஅவன் கடவுளை நோக்கிப் பன்னிரண்டு ஆண்டுகள் கடுமையாகத் தவம் செய்தான்.
அவன் தவத்திற்கு இரங்கிய கடவுள் அவன் முன் தோன்றினார். என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்.
என் குலம் தழைக்க ஒரு மகன் வேண்டும் என்றான் அவன்.
அப்படியே ஆகட்டும் என்று வரம் தந்து மறைந்தார் கடவுள்.
அதன்படியே அவனுக்கு ஒரு குழந்தை பிறந்தது.
அந்தக் குழந்தைக்குக் கண் பார்வை தெரியவில்லை. குழந்தையும் வளர்ந்து பெரியவன் ஆனான்.
கண் பார்வையற்ற தன் மகனைப் பார்த்து அழுதான் அவன்.
மகனே! உன்னைப் பெறுவதற்காகப் பன்னிரண்டு ஆண்டுகள் தவம் செய்தேன். கடவுளே என் முன் தோன்றினார். பார்வையற்ற மகனாக எனக்கு நீ பிறந்தாய் என்று வருத்தத்துடன் சொன்னான்.
தந்தையே! நான் குருடனா அல்லது நீங்கள் குருடரா என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது? என்றான் அவன்.
மகனே! எதனால் அப்படிச் சொல்கிறாய்? என்று திகைப்புடன் கேட்டான் அவன்.
தந்தையே! கடவுளே உங்கள் முன்னால் தோன்றினார். என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்.
பிறப்பு இறப்பற்ற வீடுபேறு நிலையைக் கேட்காமல் மகனை வரமாகக் கேட்டீர்கள். அதனால்தான் அப்படிக் கேட்டேன் என்று விளக்கினான் மகன்.