இரண்டு பேர் ஒரு பெரிய ஏரியில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒருவன் கொட்டாவி விட்டுக் கொண்டே, ஆயிரம் மீன்களைப் பிடிப்பதாகக் கனவு கண்டேன் என்று கூறினான்.
அதற்குள் மற்றவன் குறுக்கிட்டு, அதில் பாதியை எனக்குக் கொடுப்பாயா! என்று கேட்டான்.
முதலாமவன்: முடியாது.
இரண்டாமவன்: அதில் கால் பகுதியாவது
முதலாமவன்: முடியாது
இரண்டாமவன்: ஒரே ஒரு மீன்
முதலாலமவன்: முடியாது
இரண்டாமவன்: நீ நல்ல நண்பன் என நினைத்தேன். இதைக்கூட நீ எனக்குச் செய்யக்கூடாதா?
கனவு கண்டவன் கூறினான்: கனவு காண முடியாத சோம்பேறியாக நீ இருக்கிறாய். உனக்கு நான் எப்படி உதவி செய்வது?
ஆம்! கனவு காண்பதற்குக் கூட கஞ்சத்தனம் காட்டும் எண்ணம் கொண்டால் எப்படி முன்னேற முடியும்?