ஒரு வீட்டின் முற்றத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. வெயிலில் தெரிந்த தனது நிழலைப் பிடிக்க அது முயற்சி செய்து பார்த்துத் தோல்வியடைந்தது.
நிழலைப் பிடிக்க குழந்தை முன்னால் நகரும் போதெல்லாம் நிழலும் விலகிச் சென்றதால், குழந்தை ஏமாற்றமடைந்து அழ ஆரம்பித்தது.
குழந்தையின் அழுகைக்கான காரணத்தை அறிந்த தாய், அதன் வீண் முயற்சியை அதற்கு விளங்க வைக்க முடியவில்லை.
அந்த வேளையில் அங்கு ஒரு சாது வந்தார்.
அவர் குழந்தை அழுவதன் காரணத்தைக் கேட்டறிந்து, "நான் குழந்தையைச் சமாதானப்படுத்துகிறேன்" என்றார்.
அவர் குழந்தையின் கையை எடுத்து அதன் தலை மீது வைத்தார்.
உடனே நிழலைப் பிடித்து விட்டதாக நினைத்த குழந்தை மகிழ்ச்சியால் சிரித்தது.
இதைப் போலவே ஒரு குருவின் துணையுடன் நாம் அறிவைப் பெற்று, அவரின் வழி காட்டுதலுடன் எந்தவொரு லட்சியத்தையும் அடைய முடியும்.