பதினெட்டாவது நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் ராபெர்ட் ஓவென் (RobenOwen) என்ற ஒருவர் இருந்தார்.
அவர் துணி தயாரித்து வரும் ஒரு தொழிற்சாலையை விலைக்கு வாங்கினார்.
அவர் தொழிற்சாலையில் இருக்கும் ஒவ்வொரு இயந்திரத்திலும் சிவப்பு, பச்சை, மஞ்சள் ஆகிய கலர்களைக் கொண்ட மூன்று நாடாக்களைக் கட்டி வைத்தார்.
தொழிலாளர்கள் அனைவரும், 'எதற்காக மூன்று வர்ணங்களைக் கொண்ட நாடாக்கள் ஒவ்வொரு இயந்திரத்திலும் கட்டப்பட்டிருக்கின்றன' என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தார்கள்.
சில நாட்களுக்குப் பிறகு அவர்கள், அந்த நாடாக்கள் ஒவ்வொரு இயந்திரத்தையும் இயக்கி வரும் தொழிலாளியின் திறமையை எடுத்துக் காட்டுகின்றன என்பதைப் புரிந்துகொண்டார்கள்.
மிகவும் பாடுபட்டு நன்கு உழைத்து வருபவர்களுடைய இயந்திரங்களில் சிவப்பு நாடாக்கள் மட்டும் காணப்பட்டன.
சராசரி தொழிலாளியைப் போன்று வேலைச் செய்து வருபவர்களுடைய இயந்திரங்களில் பச்சை நாடாக்கள் காணப்பட்டன.
சரியாக வேலைச் செய்யாத தொழிலாளர்கள் இயக்கி வந்த இயந்திரங்களில் மஞ்சள் நாடாக்கள் காணப்பட்டன.
தொழிற்சாலையின் சொந்தக்காரர், தொழிலாளியின் திறமையை எடுத்துக்காட்டும் ஒரு நாடாவை மட்டும் இயந்திரத்தின் மீது வைத்துவிட்டு, மற்ற இரண்டு நாடாக்களை அகற்றிவிட்டார்.
புதிய முதலாளி தொழிலாளர்களிடம், அவர்களுடைய செயல் திறமையைப் பற்றி வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை. ஆனால் அந்த மூன்று நாடாக்களின் மூலம் அவர் ஒவ்வொரு தொழிலாளியினுடைய செயல் திறமையை எடுத்துக் காட்டிவிட்டார்.
அதற்கு பிறகு எந்த ஒரு தொழிலாளியும் தன் இயந்திரத்தில் மஞ்சள் நாடா இருப்பதை விரும்பவில்லை .
தொழிலாளிகள் அனைவரும் கடினமாக உழைக்க ஆரம்பித்தார்கள்.
சிறிது நாட்களுக்குப் பிறகு அந்தத் தொழிற்சாலையில் இருந்த அத்தனை இயந்திரங்களிலும் "சிவப்பு நாடாக்கள் மட்டும் தென்பட்டன.