தங்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காக மூன்று பேர் ஒரு ஞானியை அடைந்தார்கள்.
ஞானி அவர்களைப் பார்த்து, ``கண்ணுக்கும் காதுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?’’ என்று கேட்டார்.
முதல் ஆள், ``ஐந்து அங்குலம்’’ என்றான்.
இரண்டாவது ஆள், ``காதால் கேட்பதை விடக் கண்ணால் பார்ப்பதைத்தான் உலகில் மக்கள் நம்புகிறார்கள். அதுதான் வித்தியாசம்’’ என்றான்.
மூன்றாவது ஆள், ``கண்ணைவிடக் காதுதான் உயர்ந்தது. ஏனென்றால் கண்ணால் எதிரே உள்ளவைகளைத்தான் பார்க்க முடியும். ஆனால் காதால், தத்துவார்த்தம் பொருந்திய எத்தனையோ செய்திகளைக் கேட்க முடியும்’’ என்றான்.
ஞானி முதல்வனைச் சீடனாக ஏற்க மறுத்தார். இரண்டாவது ஆளுக்குக் கடவுளை வழிபடும் வழியைச் சொல்லிக் கொடுத்தார். மூன்றாவது ஆளுக்கு பிரம்மஞானத்தை உபதேசித்தார்.