“குருவருள் இன்றி திருவருள் இல்லை...” என்கிறார்களே, குருவின் துணையின்றி எதையும் செய்ய இயலாதா” என்று ஒரு பக்தன் குருமகானிடம் சந்தேகம் கேட்டார்.
குரு, ஒரு இரும்புத் துண்டை எடுத்து நீரில் போட்டார். அது நீரில் மூழ்கியது.
பிறகு ஒரு மரப்பலகையை எடுத்து, அதன் மேல் அந்த இரும்புத் துண்டை வைத்து நீரில் விட்டார்.
இப்போது அந்தப் பலகையின் உதவியால் இரும்புத் துண்டும் மிதந்தது.
அதைப் பக்தனுக்கு காட்டி, “இப்படிப் பிறவிப் பெருங்கடலில் மூழ்காமல் தப்பி இறைவனின் திருவருளைப் பெற வேண்டுமானால், ஒரு குருவின் துணையோடு செயல்புரிந்து ஆன்மஞானம் அடைவதே சிறப்பு” என்றார் குரு.
குருவைப் பணிந்து சீடனானான் பக்தன்.