ஏழை ஒருவன் தனது பழைய நண்பனைச் சந்தித்தான். அவனிடம் தான் வறுமையில் வாடித் தவிப்பதைச் சொல்லி அழுதான்.
அந்த நண்பன் அவனுக்கு உதவ விரும்பினான். அவனிடம் ஒருவகை மந்திர சக்தி இருந்தது. அதைக் கொண்டு அவன் அந்த ஏழையின் துன்பத்தைப் போக்க நினைத்தான்.
அவன் தனது ஆள்காட்டி விரலை அந்தச் சாலையோரம் கிடந்த செங்கல்லை நோக்கி நீட்டினான். என்ன ஆச்சரியம்! உடனே அந்தச் செங்கல் தங்கக்கட்டியாக மாறிவிட்டது.
அதை எடுத்து அந்த நண்பன், ஏழையிடம் கொடுத்தான்.
ஆனால் அந்த ஏழைக்குத் திருப்தி ஏற்படவில்லை. அந்த நண்பன் தன் மந்திர சக்தியால் மேலும் நிறையத் தங்கம் வரவழைத்துக் கொடுத்தான்.
அப்போதும் அந்த ஏழையின் முகத்தில் சந்தோஷம் காணப்படவில்லை.
"உனக்கு இன்னும் என்னதான் வேண்டும்?" என்று அந்த நண்பன் கேட்டான்.
"உன்னுடைய விரல் வேண்டும்” என்று பதில் வந்தது.