திருமகளுக்கு சுயம்வரம் நடந்தது. அங்கு அவளைத் திருமணம் செய்து கொள்ளும் பேராவலில் தேவர்களும், அசுரர்களும் கூட்டம் கூட்டமாக வந்திருந்தார்கள்.
திருமகள் மண மண்டபத்திற்குள் நுழைந்தாள். 'ஆசை என்பது நிலையில்லாதது. தன் மீது யார் ஆசையில்லாமல் இருக்கிறார்களோ அவரையே திருமணம்செய்து கொள்வேன்' என்ற எண்ணத்துடன் அவள் இருந்தாள்.
மண்டபத்தில் இருந்த எல்லோரும் தங்களை மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த நிலையில் திருமகள், 'இவர்கள் எல்லோரும் ஆசை வயப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஆசை வயப்படாதவர்யார் இருக்கிறார்?' என்று எங்கும் தேடி அலைந்தாள்.
அவள் முன் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலின் உருவம் தோன்றியது. சுயம்வரம் பற்றிய எண்ணம் இல்லாமல் திருமால் யோக நித்திரையில் இருந்தார்.
அதனால் மகிழ்ந்த திருமகள் அவருக்கே மாலை சூட்டினாள்.