கிரேக்க அறிஞரான சாக்ரடீஸ் ஒரு வீடு கட்டினார்.
தன் நண்பர்களை அழைத்த அவர், “இந்த வீட்டைப் பார்த்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்' என்றார்.
எல்லோரும் வீட்டைச் சுற்றிப் பார்த்தார்கள்.
“வீட்டின் முகப்பு நன்றாக இல்லை” என்றார் ஒருவர்.
“ஜன்னல்கள் இன்னும் பெரிதாக இருந்திருக்க வேண்டும்" என்றார் இன்னொருவர்.
"வீட்டின் அழகையே கதவு கெடுக்கிறது. வேலைப்பாடமைந்த வேறு ஒரு நல்ல கதவு பொருத்த வேண்டும்” என்றார் மற்றொருவர்.
"என்ன சாக்ரடீஸ்? கூடத்து அறை இவ்வளவு சிறியதாக இருக்கிறது? ஒரே நேரத்தில் நான்கு பேர் தங்க முடியாது போல் இருக்கிறதே!" என்றார் வேறொருவர்.
அதற்குச் சாக்ரடீஸ், "அறை சிறியதாக இருப்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. இதில் தங்குகின்ற அளவிற்கு உண்மையான நண்பர்கள் இருந்தால் எனக்கு அது போதும்” என்றார்.