Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
எங்களைப் பற்றி | படைப்புகள் | இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!! | Font Problem |   | 
muthukamalam
முத்து: 06 கமலம்: 24
உள்ளடக்கம்
பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)

Alexa Rank


Parable
குட்டிக்கதை

இரட்டிப்பான பரிசு!


அரசவையில் ஒரு நாடகம் நடித்துக் காண்பிக்கப்பட்டது. நாடகத்தில் துறவியாக நடித்தவர் மிகச் சிறப்பாகத் தன் பங்கைச் செய்திருந்தார்.

நாடகம் முடிந்ததும் துறவியாக நடித்த நடிகருக்குப் பரிசு தருவதாக அறிவித்தார் அரசர்.

ஆனால், அரங்கிற்குப் பின்னால் சென்ற நடிகர், தன் வேடத்தைக் களைந்துவிட்டு இயல்பான உடையுடன் வெகு நேரம் கழித்து வந்தார்.

அங்கிருந்த அனைவருக்கும் கடும் கோபம். அர்சர் பரிசளிக்கிறார் என்று தெரிந்திருந்தும் அவரை காக்க வைத்துவிட்டுச் சென்றுவிட்டாரே என்று கோபமடைந்தனர். அரசரும், அவர் உண்டாக்கிய தாமதத்தால் பொறுமை இழந்துதான் போனார்.

அதன் பின்னர் அந்த நடிகர் அங்கு வந்தார்.



அரசரும் அரசவையில் இருப்பவர்களும் கடுங்கோபத்தில் இருப்பதையும் தெரிந்து கொண்டார்.

அவர் சொன்னார்;

“அரசரும், அவையிலிருப்பவர்களும் என்னை மன்னித்தருள வேண்டும். இங்கு அரசர் எனக்குப் பரிசளித்திருப்பது என்னுடைய துறவி வேடத்தில் நான் காட்டிய ஈடுபாட்டிற்குத்தான். எல்லாம் துறந்த துறவி வேடத்தில் நடித்த நான், அதே வேடத்தில் வந்து பரிசை வாங்கிக் கொள்வது எனக்கு சரியாகப்படவில்லை. அதனால் அந்தத் துறவி வேடத்தைக் களைந்து விட்டு என் இயல்பான உடைக்கு மாற்றமாகி வருவதற்கு சற்று தாமதமாகி விட்டது... தங்களனைவரையும் காக்க வைத்ததற்காக என்னை இங்கிருக்கும் அனைவரும் மன்னிக்க வேண்டுகிறேன்” என்றார்.

இதைக் கேட்ட அரசர் அவருக்கான பரிசுத்தொகையை இரட்டிப்பாக்கி வழங்கினான்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p212.html






கேள்வி என்று ஒன்று இருந்தால் அதற்கு பதில் ஒன்றும் இருக்கத்தானே செய்யும். ஆனால் சில கேள்விகளுக்குப் பதில்களே இல்லை என்று ஒரு இணையதளம் சொல்கிறது.

இந்த இணையதளத்தில் பதிலில்லாத கேள்விகள் என்று பல கேள்விகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்தக் கேள்விகளுக்குப் பதில் உங்களிடமிருக்கிறதா? என்று முயற்சித்துப் பார்க்கலாமே?

வாங்க... பதில் சொல்லிவிட்டுப் போங்க... இதற்குப் பரிசு எல்லாம் கிடையாதுங்க...

     - உ. தாமரைச்செல்வி.








தேனி. எம். சுப்பிரமணி எழுதிய நூல்கள்

        
தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையச் சிற்றிதழ்கள், சுவையான 100 இணையதளங்கள், மாணவர்களுக்கான 100 இணையதளங்கள்