ஒரு சமயம் திறமைசாலியான விஷ வைத்தியர் ஒருவர் ஒரு காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தார்.
அந்த வழியில் ஒரு வேங்கைப்புலி, பாம்பு கடித்ததால், மயங்கிய நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது.
அதைக் கண்ட வைத்தியர், தான் வைத்திருந்த மூலிகை மருந்தை வேங்கையின் காயத்திலும் வாயிலும் பிழிந்தார்.
அதனால் வேங்கையின் உடலில் ஏறியிருந்த விஷம் சிறிது சிறிதாக இறங்கியது. அது மயக்கம் தெளிந்து கண் விழித்தது.
அதைக் கண்டு வைத்தியர் மிகவும் மகிழ்ந்தார். வேங்கையை அன்புடன் தடவிக்கொடுத்தார்.
ஆனால், வேங்கை அவரை ஓங்கி அறைந்தது. அது தனக்கு உதவிய வைத்தியரையே கொன்று தின்றது.
‘புல்லறிவாளர்களுக்குச் செய்யும் உபகாரம், கல்லின் மேல் போட்ட கண்ணாடிப் பாத்திரம் போல் சிதறிப் போகும்’ என்கிற ஒளவையாரின் கருத்தைக் கவனத்தில் கொள்ளலாம்.