ராமர், ராவணனுக்கு எதிராக யுத்தக் களத்தில் நின்று கொண்டிருந்த நேரம், சரணம் என்றபடி சத்ருவான ராவணனின் தம்பி வீபிஷணன்.
அபயம் என்று வந்த வீபிஷணனை அரவணைத்து ஏற்றுக் கொண்டார் ராமச்சந்திரன்.
அதோடு, தன் சகோதரன் என்றும் சொன்னார்.
உடனிருந்த லட்சுமணனை அழைத்து, “இப்போதே வீபிஷணனுக்கு அரசுப் பட்டம் சூட்டு!” என்றார்.
அண்ணன் சொன்னதை அப்படியே செய்து முடித்தான் இலட்சுமணன்.
அப்போது அங்கிருந்த ஜாம்பவான், ராமபிரானிடம் ஒரு சந்தேகம் கேட்டார்.
“ராமச்சந்திரா...! இப்போதே வீபிஷணனுக்கு அரசுரிமையளிப்பதாக வாக்குறுதியளித்து விட்டீர்களே...? ஒரு வேளை இராவணன் மனம் மாறி, சமாதானம் செய்து கொண்டு விட்டால், இலங்கை அரசை வீபிஷணனுக்கு அளிக்க முடியாதே...! அப்போது என்ன செய்வீர்கள்?”
“அதனால் என்ன?, பதினான்கு ஆண்டு வனவாசத்திற்குப் பின்பு அயோத்தி மாநகர், எனக்குக் கிடைக்குமல்லவா? அதனை வீபிஷணனுக்கு அளித்து விடுவேன்” என்றார்.