குரங்குக் குட்டி அங்குமிங்கும் அலையும் தன் தாயைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும்.
பூனைக் குட்டியோ அப்படி செய்வதில்லை. அது பார்ப்பவர்கள் அனைவரும் இரக்கப்படும்படி கத்தும். ஏனெனில், அந்தப் பூனைக்குட்டியின் தாய்ப் பூனை அதன் கழுத்தைக் கவ்வித் தூக்கிக் கொண்டு போகும்.
குரங்குக் குட்டி தன்னுடைய பிடிப்பை விடுமானால் கீழே விழுந்து காயமடையும். ஏனெனில் அது அதன் பலத்தை நம்பியிருக்கிறது.
பூனைக்குட்டியோ அப்படிப்பட்ட ஆபத்துக்குள்ளாவதில்லை. ஏனென்றால், அதை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அதன் தாயே தூக்கிக் கொண்டு போகிறது.
பூனைத் தாயின் பாதுகாப்பே சிறந்தது.