ராமன், சீதை திருமணம்.
ராமன் சீதைக்கு மாலை அணிவிக்கிறான். ஆனால், சீதையால் ராமனுக்கு மாலை அணிவிக்க முடியவில்லை. ராமன் சற்று உயரமாக இருந்தான்.
சீதையால் ராமனைக் குனியச் சொல்லி மாலையைப் போட மனமில்லை. சபையில் எம்பிக் குதித்துப் போடவும் கூச்சமாக இருந்தது. ராமனும் குனிந்து சீதையிடம் மாலையை வாங்கிக் கொள்ளவில்லை.
இதை அருகிலிருந்து பார்த்த லட்சுமணன், ராமன் முன் விழுந்து, அவன் பாதங்களைத் தொட்டான்.
உடனே ராமன் தன் பாதங்களில் வீழ்ந்த லட்சுமணனைத் தூக்குவதற்காகக் குனிந்தான்.
இதுதான் தனக்கு சரியான வேளை என்று உணர்ந்த சீதை ராமனின் கழுத்தில் மாலையைப் போட்டாள்.
ராமனுக்கு லட்சுமணன் செய்த தந்திரம் புரிந்தது.