பவுத்த சமயத்தில் பத்து வருடங்கள் ஒரு குருவிடம் கற்றுக் கொண்டால், அதன் பிறகு புதியதாக ஒரு குருகுலத்தைத் தொடங்கி அதன் குருவாக இருக்கலாம் என்கிற நெறிமுறை இருந்தது.
குருவிடம் வந்தான் மாணவன். வரும்போதே அவனிடம் அலட்சியமும் பெருமையும் இருந்தது.
"குருவே இன்றோடு உங்களிடம் படிக்க வந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன" என்றான் மாணவன்.
"அப்படியா?"
"ஆமாம் குருவே. நான் அனைத்தையும் கற்றுவிட்டேன். இனி நான் தனியாக ஒரு குருகுலம் தொடங்கலாம் என்றிருக்கிறேன்.”
"அப்படியா? எல்லாம் உனக்குத் தெரிந்துவிட்டதா?" அமைதியாய் கேட்டார் குரு.
"எல்லாமே எனக்குத் தெரியும்."
"அப்படியானால் சரி, உன்னிடம் ஒரே ஒரு கேள்வி”
“ஆமாம்”
“குடையை செருப்புக்கு வலப்புறம் வைத்தாயா? இடப்புறம் வைத்தாயா?”
மாணவன் யோசித்தான். குருவிடமிருந்து சட்டென்று வந்த இந்தக் கேள்விக்கு மாணவன் பதில் சொல்லவில்லை.
"எல்லாம் எனக்குத் தெரியும் என்று சொல்லும்போதே, நீ சரியாகப் பாடம் கற்கவில்லை என்று எனக்குத் தெரிந்துவிட்டது. நீ இந்த குருகுலத்தில் கற்க வேண்டியது நிறைய உள்ளது." என்றார் குரு.
அந்தச் சீடன் அமைதியாக அந்த ஆசிரமத்தினுள் சென்றான்.