ஒரு ஆற்றங்கரையின் ஓரமாக பிள்ளையார் கோயில் ஒன்றிருந்தது.
இக்கோயிலில் பலரும் அபிசேக ஆராதனைகள் செய்து வழிபட்டுக் கொண்டிருந்தனர்.
அந்த வழியில் நாத்திகவாதி ஒருவர் ஒரு நாயைக் கையில் பிடித்துக் கொண்டு வந்தார்.
நாத்திகவாதி அங்கிருந்தவர்களைப் பார்த்து, “மனிதர்களே... கல்லை ஏன் வணங்குகிறீர்கள்? என்னுடைய நாயையும் உங்களுடைய பிள்ளையாரையும் இதோ, இங்கு ஓடும் ஆற்றில் தூக்கிப் போடுவோம். யார் கரையேறி வருகிறார்களோ, அவரைத் தெய்வமாக வணங்கலாம்” என்றார்.
அங்கிருந்தவர்கள் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒருவர், “அய்யா, நீங்கள் கூறியபடி செய்வதற்கு முன்பு வேறு ஒரு முயற்சி செய்வோம். தங்களுடைய நாயைத் தூக்கிப் பிள்ளையார் மேல் போடுவோம். பிறகு, எங்கள் பிள்ளையாரைத் தூக்கி உங்கள் நாய் மேல் போடுவோம். யார் பிழைத்திருக்கிறாரோ அவரைக் கொண்டு பின்னர் முடிவு செய்வோம். சரிதானா?” என்றார்.
நாயுடன் வந்தவர் மவுனமாகத் திரும்பிச் சென்றார்.