மகாதேவ கோவிந்த ரானடே ஒருமுறை பம்பாயில் ஒரு பெரிய மிசனரியின் பாதிரியாரைப் பார்க்கச் சென்றார்.
பாதிரியாரின் மேசையில் பல மதங்களின் புனித நூல்கள் இருந்தன. அவற்றில் பைபிள் அனைத்திலும் மேலாக வைக்கப்பட்டிருந்தது. பகவத் கீதை புனித நூல்கள் அனைத்திற்கும் கீழாக இருந்தது.
அவர்களிருவருக்குமான உரையாடலின் போது,
பாதிரியார், “கிறித்தவ சமயமே அனைத்திலும் தலைச்சிறந்தது” என்று வலியுறுத்தினார்.
அங்கிருக்கும் புனித நூல்களைக் காண்பித்து, “இங்கு கூட பாருங்கள். புனித நூல்களில் பைபிள் மேலாக வைக்கப்பட்டிருக்கிறது. எனவே பைபிள் உயர்ந்த நூல்தானே?” என்றார்.
உடனே ரானடே, “உண்மைதான். பைபிள் உயர்ந்த நூல்தான். ஆனால் இங்கு தாங்கள் ஒன்றைக் கவனிக்க மறந்து விட்டீர்கள். இங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள புனித நூல்கள் அனைத்திற்கும் கீழாக பகவத்கீதை இருக்கிறது.அனைத்துப் புனித நூல்களுக்கும் அடிப்படையாக இருப்பது பகவத்கீதைதான். பார்த்தீர்களா?” என்றார்.