கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞன் வெளிநாடுகளில் சென்று பணம் சம்பாதிப்பதற்காக வீட்டி விட்டுக் கிளம்பினான்.
அவன் வெளியில் செல்லும் போது, அவனுடைய தந்தை அவனுக்கு ஒரு மோதிரத்தைப் பரிசளித்து ஆசிர்வதித்தார்.
அவனும் தந்தை கொடுத்த மோதிரத்தை அணிந்து கொண்டு சென்றான்.
வெளீநாடுகளுக்குச் சென்ற அவன் குறுகிய காலத்தில் மிகப்பெரிய பணக்காரனாகி விட்டான்.
பணக்காரனாகி விட்ட அவனை ஒரு பெரிய பணக்காரப் பெண்மணி மணக்க முன் வந்தாள்.
அவனுடைய திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நாளில் அவனது கப்பல்கள் கடலிம் மூழ்கிப் போய்விட்டதாக செய்தி கிடைத்தது. அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாத அவன் தன் வாழ்வையே முடித்துக் கொள்ளலாம் என்று நினைத்தான்.
மனமுடைந்து போயிருந்த நேரத்தில் அவனுக்கு அவனுடைய தந்தையின் ஞாபகமும்,அவர் பரிசளித்த மோதிரம் குறித்த நினைவும் ஞாபகமும் வந்தது.
அவன் தன் கை விரலில் அணிந்திருந்த மோதிரத்தைப் பார்த்தபடி கழற்றினான். அப்போதுதான் அந்த மோதிரத்தின் உள் பகுதியில் சில எழுத்துக்கள் பதிக்கப்பட்டிருப்பதைக் கவனித்தான்.
அந்த எழுத்துக்களைக் கூட்டிப் படித்தான். அதில், “இதுவும் ஒரு நாள் போய்விடும்” என்றிருந்தது.
அவ்வாசகம்தான் அவனுக்குத் தந்த அறிவுரை அது.
ஆமாம். இந்த உலகத்தில் எல்லாம் ஒருநாள் போய்விடும். எதுவும் நிலையில்லாதது. நமக்கு வரும் துன்பங்களும்தான்.