போதி தர்மர் புத்த மதக் கொள்கைகளைப் பரப்ப ஒவ்வொரு நாடாகச் சென்று கொண்டிருந்தார்.
அவர் வருகையை அறிந்த ஒரு நாட்டு மன்னன் தன் பரிவாரங்களுடன் தன் நாட்டின் எல்லையில் நின்று கொண்டிருந்தான்.
போதி தர்மர் தன் சீடர்களுடன் வந்து கொண்டிருந்தார்.
போதிதர்மர் ஒரு காலில் மட்டும் செருப்பை அணிந்து கொண்டு, இன்னொரு கையில் அறுந்து போன செருப்பை வைத்துக் கொண்டு இருந்தார்.
கையில் செருப்புடன் மன்னரைப் பார்த்தால், மன்னருக்கு மரியாதைக் குறைவாக இருக்குமே என்று எண்ணிய அமைச்சர் அவர் கையில் வைத்திருக்கும் செருப்பைத் தான் வாங்கிக் கொள்வதென முடிவு செய்தார்.
அமைச்சர் போதிதர்மரிடம் சென்று, “சுவாமி, தாங்கள் சுமக்கும் இந்தச் செருப்பை நான் சுமக்க அருள் புரிய வேண்டும்” என்றார்.
போதிதர்மர் சிரித்துக் கொண்டே , “பரவாயில்லை... இந்தச் செருப்பு இத்தனை ஆண்டு காலமாக என்னைச் சுமந்து வந்தது. இப்போது நான் அதைச் சுமப்பதுதான் முறையாகும்.” என்று கையில் வைத்திருந்த செருப்பைத் தர மறுத்து விட்டார்.
அமைச்சர், “ஞானிகளுக்கு, அறுந்த செருப்பும், அரசனின் மரியாதையும் ஒன்று தான்” என்பதை உணர்ந்தார்.