பிரபல கிரேக்கத் தத்துவஞானிகளில் ஒருவர் டயோஜினிஸ்.
அவர் ஒருநாள், சூப் வைப்பதற்காக அவரை விதைகளைக் கழுவிக் கொண்டிருந்தார்.
அதை அருகிலிருந்த அரிஸ்டிபஸ் என்ற இன்னொரு விஞ்ஞானி பார்த்துக் கொண்டிருந்தார். இவர் கிரேக்க மன்னனுக்குத் துதிபாடியே வசதியாக வாழ்ந்து கொண்டிருந்தார்.
அரிஸ்டிபஸ், “நீங்கள் மட்டும் மன்னரைப் புகழ்ந்து துதிபாடத் தெரிந்து கொண்டிருந்தால், இந்த மாதிரி சூப்புக்காகக் கேவலம் அவரை விதைகளைக் கழுவிக் கொண்டிருக்க வேண்டாம்” என்று டயோஜினிஸிடம் கூறினார்.
பதிலுக்கு டயோஜினிஸ், “நீங்களும் இப்படி சாதாரண அவரை விதை சூப்பைக் குடித்து வாழப் பழகியிருந்தால், மன்னருக்குத் துதிபாடிக் கொண்டிருக்க வேண்டாமே!” என்றார்.