அனுமன் ஸ்ரீராமனிடம் ஒருநாள் சந்தேகம் கேட்டான். “பிரபோ! தங்களிடம் மிகுந்த அன்பு, பக்தி கொண்டவர் யார்?”
ராமன் தன் பெயரைத்தான் சொல்லப் போகிறார் என்று காத்திருந்த அனுமனுக்கு அதிர்ச்சி.
“சந்தேகம் என்ன? என் மனைவி சீதாதேவிதான்! நான் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அவள் நெற்றியிலும், வகிட்டிலும் செந்தூரம் இட்டுக் கொண்டிருக்கிறாள் பார்!” என்று ராமன் பதிலளித்தார்.
அடுத்த நாள்.
உடல் முழுக்க செந்தூரம் பூசிக் கொண்டு வந்து நின்றான் ஆஞ்சநேயன்.
“பிரபோ... இப்போது சொல்லுங்கள்...!” என்று ஆஞ்சநேயன் கேட்க இராமர் கலங்கி விட்டார்.
“நீதான் நீயேதான்! என் அன்புக்கும், பிரியத்துக்கும் பாத்திரமானவன் நீதான்! எனக்கு யாரெல்லாம் செந்தூரம் பூசுகிறார்களோ அவர்களுக்கும் என் அருள் கிடைக்கும்” என்றார் இராமன்.