பைரஸ் என்ற கிரேக்கப் பேரரசன் ஒருமுறை பெரும்படையுடன் புறப்பட்டான்.
அப்போது அங்கு வந்த தத்துவஞானி கிளியாஸ் அரசரிடம், “அரசே! இந்தப் போர் எந்த நாட்டின் மீது?” என்று கேட்டார்.
“ரோமாபுரியின் மீது” என்றான் அரசன்.
“இத்துடன் போரை முடித்துக் கொள்வீர்களா?”
“இல்லையில்லை... எனது அடுத்த இலக்கு இத்தாலியின் மீது”
“அப்புறம்...?”
"ஒவ்வொரு நாட்டின் மீதும் படையெடுத்து வெற்றிக் கொடி நாட்டுவேன்”
“அனைத்து நாட்டையும் வென்றுவிட்ட பிறகு...?”
“எனது கடைசிக் காலத்தை அமைதியாகக் கழிப்பேன்”
பைரசைப் பார்த்து தத்துவஞானி கிளியாஸ் கேட்டார்.
“அரசே! சற்று சிந்தியுங்கள்! உங்கள் கடைசிக் காலத்தில் கழிக்கப் போவதாகச் சொன்ன அந்த அமைதியை நீங்கள் இப்போதே மேற்கொண்டால் தாங்கள் போர் தொடுப்பதால் ஏற்படும் அவலங்கள் எத்தனை எத்தனையோ மிஞ்சும். எத்தனை எத்தனையோ உயிர்கள் உயிரோடு இருக்கும். போர் வேண்டுமா? உலகம் அழியத்தான் வேண்டுமா? சிந்தியுங்கள்!”
கிளியாசின் வார்த்தைகளைக் கேட்ட பைரஸ் மனம் மாறினார்.
“இன்றிலிருந்து போர் தொடுக்கும் எனது முடிவினை மாற்றிக் கொள்கிறேன்” என்றார் பைரஸ்.