பைரஸ் என்ற கிரேக்கப் பேரரசன் பெரும்படையுடன் போருக்குப் புறப்பட்டான்.
அப்போது அங்கு வந்த தத்துவஞானி கிளியாஸ் அப்போது, “அரசே! இந்தப் போர் எந்த நாட்டின் மீது?” என்று கேட்டார்.
அரசன், “ரோமாபுரி மீது” என்றான்.
“இத்துடன் போரை முடித்துக் கொள்வீர்களா?”
“இல்லை... இல்லை... அடுத்ததாக எனது இலக்கு அந்த இத்தாலியின் மீது!”
“அப்புறம்”
“மேலும் சில நாடுகளின் மீதும் படையெடுத்து வெற்றிக்கொடி நாட்டுவேன்...”
“எல்லா நாடுகளையும் வென்ற பிறகு...?”
“எனது கடைசிக் காலத்தை அமைதியாகக் கழிப்பேன்”
பைரசைப் பார்த்து தத்துவஞானி கேட்டார், “அரசே! சற்று சிந்தியுங்கள்! உங்கள் கடைசிக் காலத்தில் கழிக்கப்போவதாகச் சொன்ன அந்த அமைதியை நீங்கள் இப்போதே மேற்கொண்டால், தாங்கள் போர் தொடுப்பதால் ஏற்படும் அவலங்கள் அனைத்தும் மிஞ்சுமே! எத்தனையோ உயிர்கள் உயிரோடு இருக்கும். போர் வேண்டுமா? உலகம் அழியத்தான் வேண்டுமா? சிந்தித்து முடிவெடுங்கள்!”
கிளியாசின் சொற்கள் பைரசின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தின.
“நீங்கள் சொல்வதும் சரிதான். இனி எந்த நாட்டின் மீதும் நானாகப் போர் தொடுக்கப் போவதில்லை!”