பவேரியா நாட்டினைக் கெல்ப் என்ற மன்னன் அரசாட்சி செய்து வந்த நிலையில், காண்ட்ராட் என்ற பேரரசன் பவேரியா மீது படையெடுத்து வந்து வெற்றி கண்டான்.
வெற்றி பெற்ற காண்ட்ராட் கெல்ப் பவேரியா மன்னன் வசித்த நகருக்குத் தீ வைத்தான்.
அரசகுலப் பெண்கள் மட்டும் தங்களால் தூக்கிச் செல்ல முடிந்ததை மட்டும் முதுகில் சுமையுடன் நகரிலிருந்து வெளியேறலாம் என்றும் அனுமதியளித்தான்.
அரச குலப் பெண்கள் பொன் பொருளை உதறிவிட்டுத் தங்கள் உயிரினும் மேலான கணவன், குழந்தைகளை முதுகில் சுமந்தபடி வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.
இக்காட்சியைக் கண்ட காண்ட்ராட் மன்னன் உள்ளம் உருகினான். தன் கணவன் மீதும், குழந்தைகள் மீதும் அவர்கள் வைத்திருந்த அன்பைக் கண்டு, தான் போரில் வெற்றி பெற்ற பவேரியா நாட்டை கெல்ப் மன்னனிடமே திரும்பக் கொடுத்துவிட்டுத் தன் நாட்டுக்குத் திரும்பினான்.
பெண்ணின் புத்திசாலித்தனம் நாட்டையே திரும்பப் பெற்றுக் கொடுத்தது.