ராமபிரான் மீனும் தேனும் சாப்பிடுவாரா?
ராமபிரான் பஞ்சவடி செல்வதற்காக சீதை மற்றும் லெட்சுமணனுடன் கங்கைக்கரைக்கு வந்தார்.
ராமனின் தீவிர பக்தனான குகன் ஒரு கையில் மீனையும், இன்னொரு கையில் தேனையும் எடுத்து வந்திருந்தான்.
அவன் ராமனிடம், இரண்டையும் கொடுத்து அதை ஏற்றுக் கொள்ள வேண்டினான்.
அவனுடைய செயலைக் கண்டு அங்கிருந்த முனிவர்கள் முகம் சுளித்தனர். இது குற்றமாயிற்றே என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
சைவ உணவுகளையே சாப்பிடும் ராமன் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று அவர்கள் நம்பினர்.
தேன் மரத்தின் உச்சியில் இருப்பது. அது அன்பின் உச்சநிலை. மீன் தண்ணீரின் அடியில் ஆழத்தில் இருப்பது. அது அன்பின் ஆழமான நிலை. எனவே, ராமனுக்கு அவன் கையிலுள்ள பொருட்கள் தெரியவில்லை. அன்பின் உச்சமும் ஆழமும்தான் தெரிந்தது. இரண்டையுமே வாங்கிக் கொண்டார்.
“ராமா! நான் கொடுத்த தேனையும், மீனையும் சாப்பிட்டால்தான் என் மனம் சந்தோசப்படும்” என்று குகன் சொன்னான்.
அதற்கு ராமன், “நீ அன்போடு கொடுத்த போதே என் மனத்தால் அதைச் சாப்பிட்டு விட்டேன்” என்று பதில் சொன்னார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.