இளம் துறவிகள் ஆறு பேர் ஒரு இடத்தில் சந்தித்துக் கொண்டனர்.
அவர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்து எதைக் கேட்டுப் பெறுவது என்று ஆலோசனை செய்தனர்.
ஒருவர், “உணவு கேட்கலாம்” என்றார்.
மற்றொருவர், “பலம் கேட்கலாம்” என்றார்.
மூன்றாமவர், “அறிவைக் கேட்கலாம்” என்றார்.
நான்காமவர், “அமைதியைக் கேட்கலாம்” என்றார்.
ஐந்தாமவர், “அன்பை வேண்டுவதே மேல்!” என்றார்.
ஆறாமவர், “தியாக உணர்வை வேண்டலாம்” என்றார்.
அப்போது அந்த வழியாக வந்த முதிய ஞானி ஒருவர், “வீண் பேச்சில் இருக்கும் காலத்தை ஏன் வீணாக்குகிறீர்கள். முதலில் இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் கேட்பதைக் காட்டிலும், உங்களுக்கு வேண்டியதைக் கொடுக்க இறைவன் தயாராக இருக்கிறான்” என்றார்.
ஆறு இளம் துறவிகளும் தங்களின் தவறை உணர்ந்து, இறைவனைப் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர்.