கடவுளைக் காண என்ன வழி?
கல்லூரிப் பேராசிரியர் ஒருவர், ரமண மகரிஷியிடம், “கடவுளைக் காண எனக்கு உதவுங்கள்” என்று கேட்டார்.
ரமணர் அவரிடம், “கடவுளைக் காண விரும்பும் நீங்கள் யார்?” எனக் கேட்டார்.
“நான் தேவதத்த சர்மா”
“அது உங்கள் பெயர். நீங்கள் யார்?”
“நான் ஒரு அந்தணன்”
அது உங்கள் சாதி. நீங்கள் யார்?”
“நான் கல்லூரிப் பேராசிரியர்”
“அது உங்கள் தொழில். நீங்கள் யார்?”
“நான் ஒரு ஆண்”
“அது உங்கள் பிறப்பு. நீங்கள் யார்?”
“நான், யாரென்று தெரியவில்லை!”
“உங்களையே நீங்கள் அறியாமல், கடவுளை எப்படி அறியப் போகிறீர்கள்?” என்று கேட்டார் மகரிஷி
“தன்னை அறிவதே கடவுளை அறியும் வழி!” என்பதை உணர்ந்தார் வந்தவர்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.