வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு என்ன செய்வது?
ஒரு ஞானியிடம் இளைஞன் ஒருவன், “சுவாமி! வாழ்க்கையைக் குறை இல்லாமல் அமைத்துக் கொள்வது எப்படி?” என்று கேட்டான்.
ஞானி சிரித்துக் கொண்டே, “ஒரு மணி நேரம் மகிழ்ச்சி வேண்டுமா? நன்றாகத் தூங்கு. ஒரு நாள் முழுவதும் மகிழ்ச்சி வேண்டுமா? சுற்றுலா செல். ஒரு மாதம் மகிழ்ச்சி வேண்டுமா? திருமணம் செய்து கொள். ஒரு வருடம் மகிழ்ச்சி வேண்டுமா? சொத்து சேர்த்துக் கொள். வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி வேண்டுமா? வாழ்க்கையை நேசிக்கப் பழகிக் கொள்.” என்று சொல்லி அனுப்பினார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.