கடவுள் எனும் முதலாளி...!
ஒருவர் நீண்ட பயணம் மேற்கொண்டு பல கோயில்களுக்குச் சென்று வர வேண்டும் என்று விரும்பினார்.
அதற்காக அவர் நாள்தோறும் உண்டியலில் சில நாணயங்களைப் போட்டுச் சேமித்து வந்தார்.
அவர் திருத்தலங்களுக்குப் பயணம் புறப்பட்ட போது, உண்டியலில் நாணயங்கள் அதிகமாகச் சேர்ந்திருந்தன. அதை ஒரு மூட்டையாகக் கட்டித் தூக்கினார். முடியவில்லை.
உடனே அந்த நாணய மூட்டையை ஒரு கடைக்காரரிடம் கொடுத்து ரூபாயாக (பணத்தாள்களாக) மாற்றிக் கொண்டார்.
வாழ்க்கைப் பயணத்தில் நாணய மூட்டை போன்ற துன்பங்களை நாம் சுமக்கிறோம். இது தேவையற்றது. நம்முடைய துன்பங்களையெல்லாம் மூட்டை கட்டிக் கொண்டு போய் கடவுளிடம் கொடுத்தால், அதை இறைவன் இலேசாக்கி நம் வாழ்க்கைப் பயணத்தைப் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் ஆக்கி விடுவார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.