நேர்மை எதற்குச் சமம்?
நகைக்கடை வைத்திருந்த வணிகம் எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்.
அவர் வயதான காலத்தில் தன் மகனிடம் தான் பார்த்து வந்த நகைக்கடையை ஒப்படைத்தார்.
ஒப்படைத்த காலத்தில் மகன் எப்படி வணிகம் செய்கிறான் என்று அடிக்கடி கடைக்குச் சென்று பார்த்து வந்தார்.
இப்படி அவர் ஒரு நாள் கடையில் அமர்ந்திருந்த போது ஒருவர் தங்கக்காசு ஒன்றினை வாங்குவதற்காக வந்திருந்தார்.
அந்தத் தங்கக்காசை எடை போட மகன் வாங்கிக் கொண்டு அந்தக்காசிலிருந்த அழுக்குகளை எல்லாம் சுத்தமான துணி ஒன்றில் துடைத்து விட்டு, பின்னர் தராசுத் தட்டில் எடை போட்டுக் கொடுத்தான்.
இதைப் பார்த்த அந்த வயதான வணிகர் மகிழ்ச்சியடைந்தார்.
“மகனே, நீ வணிகத்தில் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதில் என்னை விட அதிகமான பற்றுதல் கொண்டிருக்கிறாய். நேர்மையாக இருப்பது கடவுள் வழிபாட்டிற்குச் சமமானது. நேர்மையாக மட்டுமிருந்து விட்டால், வேறு எந்த நல்ல செயலும் செய்ய வேண்டாம்” என்று தனது மகனைப் பாராட்டினார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.