ஒரு குரங்கு காட்டிற்குள் இருந்த மாமரத்தில் பழம் பறித்தது. தன் இருப்பிடத்திற்கு வந்து பழத்தைச் சுவைத்து விட்டு கொட்டையைக் கீழே போட்டது.
பின்னர் அதற்கு ஒரு யோசனை தோன்றியது.
இந்த மாங்கொட்டையை ஊன்றி மரமாக வளரச் செய்தால் நம் விருப்பப்படி மாம்பழங்களை உண்டு மகிழலாமே என்றூ எண்ணியது. கொட்டையை மண்ணுக்குள் புதைத்து வைத்து நீருற்றியது.
அதற்கு எண்ணமெல்லாம் மாமரத்தை வளர்ப்பதிலேயே இருந்தது.
மறுநாள் செடி ஏதும் வரவில்லை. அதற்கோ அவசரம். அந்த முட்டாள் குரங்கு, மண்ணில் புதைத்த மாங்கொட்டையை எடுத்துப் பார்த்து, கொட்டை பத்திரமாக இருப்பதைப் பார்த்ததும் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.
பின்னர் மீண்டும் கொட்டையைப் புதைத்து வைத்து நீருற்றியது.
இப்படியே தினமும் அதை எடுத்துப் பார்ப்பதும், புதைப்பதும் நீருற்றுவதுமாக இருந்தது.
இப்படிச் செய்ததால் மாங்கொட்டை முளை விடவேயில்லை.
குரங்குக்குக் கோபம் வந்துவிட்டது. மாங்கொட்டையைத் தூக்கித் தூற எரிந்தது.
குரங்கின் விருப்பம் உண்மையில் நியாயமானதுதான் என்றாலும் அதன் அவசரம் நியாயமானதா? காலம் என்ற நியதி இல்லாமல் எந்தச் செயலும் நிறைவேறுவதில்லை.