ஒரே பேச்சு!
முல்லாவிற்கு வேண்டியவர் ஒருவர் அவரைக் காண வந்திருந்தார். அவர் முல்லாவிடம், “முல்லா, தங்களின் வயது என்ன?” என்று கேட்டார்.
உடனே முல்லா, “நாற்பது” என்றார்.
அவருடம் உடனே, “முல்லா, நான்காண்டுகளுக்கு முன்னால் நான் தங்களைச் சந்திக்க வந்திருந்த போதும், இதைத் தானே கூறினீர்கள், அப்போதும் நாற்பது, இப்போதும் நாற்பதா?” என்றார்.
“இதோ பாருங்க... எனக்கு அன்றைக்கு ஒரு பேச்சு, இன்றைக்கு ப்ரு பேச்சு என்று எப்போதும் கிடையாது. என்னிடம் எப்போதும் ஒரே பேச்சுதான்” என்றபடி முகத்தைச் சுளித்துக் கொண்டார் முல்லா.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.